ஜியோ அவுட் கோயிங் காலுக்கு இனி… கட்டணம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
jio whatsapp - 2026

ஜியோவில் இருந்து மற்ற போன்களுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

ட்ராயின் உத்தரவுப்படி (IUC) இண்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கட்டணத்தை மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு செலுத்தி வந்தது.

இந்நிலையில், இனி ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோனுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது.

idea airtel vodafone jio - 2026

ஜியோவில் இருந்து ஜியோவுக்கு மட்டுமே இனி இலவசம்!

மற்ற நெட்வொர்க் கால்களுக்கு இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என்று ஜியோ அறிவித்துள்ளது

ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு நிமிடத்துக்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப் படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தக் கட்டணத்துக்கு ஈடாக, கூடுதல் டேட்டா வழங்கப் படும் என்று உறுதியளித்துள்ளது.

ரூ. 10 – 124 நிமிடங்கள் – 1 ஜிபி டேடா
ரூ.20- 249 நிமிடங்கள் – 2 ஜிபி டேடா
ரூ.50 – 656 நிமிடங்கள் – 5 ஜிபி டேடா
ரூ.100 – 1362 நிமிடங்கள் – 10 ஜிபி டேடா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.