பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

கல்வி சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
dpi office chennai - 2026

நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டது. அடுத்து தீபாவளி வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்கான பள்ளிகள் விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விடுமுறை விடலாம்.

அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளை, பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.