திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published:

11 ku - 2026

திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விஷூத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு முக்கியமான விழாக்களில் ஒன்றான ஐப்பசி விஷூத் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

therukutralam kovil 1 - 2026

அதனைதொடா்ந்து திருவிலஞ்சிக்குமாரா் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு வருகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் திருவிலஞ்சிக்குமாரா் வெள்ளி சப்பரத்திலும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏக சிம்மாசனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

therukutralam kovil 2 - 2026

விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும்,

13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

kodi - 2026

விழா நாட்களில் காலை மற்றும் இரவில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

nadarajan - 2026

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரா.விஜயலெட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img