60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து: மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Published:

who Tedros Adhanom Ghebreyesus - 2026

60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

கொரோனா தடுப்பு மருந்து உதவிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி. 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுகாதாரப் பணியாளர்களையும் முக்கியக் குழுவினரையும் மையப் படுத்தி கோவிட் 19 வேசின் அளிக்க உறுதியுடன் செயல்பட்டமைக்காக நன்றி. இதை எடுத்துக் காட்டாகக் கொண்டு மற்ற நாடுகளும் முன்மாதிரியாக செயல்படும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

vaccine gift by india - 2026

சிறிய நாடுகள் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உதவும் விதமாக பிரதமர் மோடி Vaccine Maitri என்ற திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், பூடான் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு இந்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கியது.

இதற்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

Related articles

Recent articles

spot_img