இமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்!

சினி நியூஸ் சினிமா
sivam mahadevan - 2026

றெக்க ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், சதீஷ், கோலிசோடா சாந்தினி நடித்துள்ள படம், சீறு.

ciiru - 2026

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பி ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

பல படங்களில் ஹீரோவாக நடித்த நவ்தீப், இதில் வில்லனாக நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ளதால், விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

sankar mahadevan - 2026

பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

d iman - 2026

. இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் டி.இமான், “சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.