
பிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
மாமல்லபுரம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வருவதால் உள்ளூர் வணிகர்கள் ,சிறு கடை வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அண்மையில் சீன அதிபர் இந்தியா வந்த போது தமிழகத்தில் மாமல்லபுரம் நகரத்தில் சந்திப்பது என தேர்வு செய்து கொடுத்தார் பிரதமர் மோடி மாமல்லபுரம் பல்லவர்கால கலாச்சார பெருமையை பண்பாட்டை வெளிப்படுத்தும் பழமையான நகரம்
பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொன்மையான நகரம் என்றாலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து பார்வையிட்டு செல்லும் சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது
உள்ளூர் மற்றும் வெளியூர் களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
பஞ்ச பாண்டவர் ரதம் அர்ஜுனன் தபசு வெண்ணை உருண்டை பாறை கடற்கரை கோயில் இவை பெருமளவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த அம்சங்கள் இந்நிலையில் பிரதமர் மோடி மூலம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது மாமல்லபுரம்
சீன அதிபர் பிரதமர் மோடி ஆகியோர் வந்து சென்ற பிறகு பெருவாரியான சுற்றுலாப்பயணிகள் புதுப்பிக்கப்பட்ட அந்த இடங்களை பார்வையிட ஆர்வத்துடன் உள்ளனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் மாமல்லபுரத்தை முற்றுகையிட்டனர் இது உள்ளூர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது



