
நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபரிடம் இருந்து வந்த தொலைபேசி தகவல் நேற்று பரபரப்பை ஏற் படுத்தியது.
மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100-க்கு நேற்றிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் ஒருவர், நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றுக் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
தகவல் அறிந்த காவல் கட்டுப்பாட்டு அறை காவலர்கள், இத்தகவலை காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றனர்.
இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, பனையூர் ஆகிய இடங்களில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளுக்கு விரைந்துச் சென்ற நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறிய சைபர் கிரைம் ர் உதவியுடன் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் நடித்து தற்போது வெளி வந்துள்ள ‘பிகில்’ படம் ஓடுமா ஓடாத என்ற சூழலில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் படத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என மக்கள் ம்த்தியில் சந்தேகம் அனுமானங்கள் உலவி வருகிறது. உண்மை வெளிவரும் வரை எதுவும் உண்மையில்லை.