குற்றாலத்தில் மிதமாக விழும் அருவி: குளிக்க அனுமதி!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை
IMG 20191016 WA0007 - 2026

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டது.

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மலைப் பகுதியில் கடும் மழைப் பொழிவு இருந்தது. இதனால் நேற்று அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இதை அடுத்து, அருவிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப் பட்டது.

இந்நிலையில், நேற்று குற்றாலம் மலைப் பகுதிகளில் இரவு மழை குறைந்ததை அடுத்து, அருவியில் நீர் வரத்து குறைந்தது! இதை அடுத்து, இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப் பட்டது.

நெல்லை மாவட்ட மழை அளவு (16-10-19)

பாபநாசம்:9.00மி.மீ
சேர்வலாறு 7.00 மி.மீ
மணிமுத்தாறு:9.40 மி.மீ
ராமா நதி:25 மி.மீ
கருப்பா நதி:1 1மி.மீ
குண்டாறு: 11மி.மீ
அடவிநயினார்: 25 மி.மீ
அம்பாசமுத்திரம்: 11.60மி.மீ
ஆய்குடி: 88.40 மி.மீ
சேரன்மகாதேவி: 6.60 மி.மீ
பாளையங்கோட்டை: 8.60 மி.மீ
ராதாபுரம்: 4 மி.மீ
சங்கரன்கோவில் 51 மி.மீ
செங்கோட்டை: 6 மி.மீ
சிவகிரி: 4 மி.மீ
தென்காசி: 45.20 மி.மீ
நெல்லை: 6 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.