அரசு அறிவித்த தீபாவளி போனஸ்! அரசு ஊழியர்களுக்கு 20%!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tamil nadu arasu - 2026

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மேலும், நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கும்.

மின் வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த போனஸ் அறிவிப்பால் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 பேர் பலனடைவார்கள் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.