உலையாப்பம்
தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப்,
உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 50 கிராம்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – சிறிது.
செய்முறை:
தோசை மாவில் உலர்திராட்சை, சர்க்கரை கலந்து நெய் தடவிய இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிடவும். வெந்ததும் இத்துடன் பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல் தூவி சாப்பிடக் கொடுக்கலாம். தேவைப் பட்டால் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கலாம்.
உலையாப்பம் என்பது வேறொன்றும் இல்லை. ஸ்வீட் இட்லிதான்.