பலே டேஸ்ட் பனங்கற்கண்டு பால் பொங்கல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
panakarkandu pongal
panakarkandu pongal

பனங்கற்கண்டு பால் பொங்கல்

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
பால் – தேவையான அளவு,
நெய் – தேவையான அளவு,
ஏலக்காய் – 2,
உலர் திராட்சை, முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பனங்கற்கண்டு – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் – கால் கப்.

செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை நிறம் மாற வறுத்துக்கொள்ளவும். அரிசியை கழுவி சுத்தம் செய்து, பாசிப்பருப்பு, பால் சேர்த்து குழைய வேகவிடவும். சூடான நெய்யில் ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து இதில் சேர்க்கவும். இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, பனங்கற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். பரிமாறும்போது பாதாம் துருவலை சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.