சபரிமலைக்கு சென்ற சிம்பு! புகைப்படம் வெளியிட்டார்!

சினி நியூஸ் சினிமா
simbu sabarimala - 2026

நடிகர் சிம்புவின் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வராததால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

simbu 2 - 2026

இதையடுத்து, சிம்புவின் அம்மா உஷாராஜேந்தர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். சிம்பு படத்தில் சொன்னப்படி நடித்துக் கொடுப்பார் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சிம்பு மீண்டும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

simbu 1 - 2026

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

simbu - 2026

நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்பு 27 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவுள்ளார் என தெரிகிறது.

simbu 3 - 2026

சிம்பு, கறுப்பு உடையில் அய்யப்பன் கோவிலில் வழிபடும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.