ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி… க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா? : பகீர் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி!

ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி… க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா என்று பகீர் கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச் னை பத்தாதென்று வீராவேசம் கொண்டு தன் அனுபவம் எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்து சினிமா உலகையே கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி தன் பேஸ்புக்கில் இப்படி ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.

ஏற்கெனவே சர்கார் பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்தது போல் இருந்த காட்சி குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ. 10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு சிகரெட் விலை இம்புட்டா? என்று வாய்பிளந்து கிடக்கிறது சினிமா உலகம். இந்நிலையில், முருகதாஸை மேலும் இக்கட்டில் தள்ளும் விதமாக, ஸ்ரீரெட்டி ஒரு ஹாட் மெசேஜ் கொடுத்திருக்கிறார். இது பலரது புருவங்களை உயரச் செய்திருக்கிறது. அதுவும், ஹோட்டல் க்ரீன்பார்க் நினைவிருக்கிறதா என்று கேட்டதும், தொடர்ந்து, வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய…. இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை…நீங்களும் சிறந்தவர் சார்… என்று போட்டுக் கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருப்பதும் பலரையும் ஏடாகூடமாக யோசிக்க வைத்திருக்கிறது.

குறிப்பாக, படவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். நமக்கு இடையே நிறைய… என்று சொல்லி நாலைந்து புள்ளிகள் வைத்து பகீர் கிளப்பியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

ஏற்கெனவே தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் முருகதாஸ் தனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி போஸ்ட் போட்டுள்ளார்.