‘ரயில் ப்ரியா’ நாடகக்குழுவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, புதுமை முயற்சியாக, சென்னையில் இன்று, ‘நாடக தேர்தல்’ நடக்க உள்ளது.
சென்னை, டி.டி.கே., சாலையில் உள்ள, நாரத கான சபாவில், இன்று மாலை, 5:45 மணிக்கு, ‘நாடக தேர்தல்’ நடைபெறும். தேர்தல் கண்காணிப்பாளர்களாக, காத்தாடி ராமமூர்த்தி, வரதராஜன், ராஜகோபால் சேகர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
நாடக தேர்தலில், ‘பட்டாபிக்கு நிக்காஹ், இதென்ன கலாட்டா, விண்வெளி காதலி, பார்த்து பேசு பட்டாபி’ என, நான்கு நாடகங்களின் குறும்படம், ரசிகர்களுக்கு திரையிடப்படும்.அதன் பின், ரசிகர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டெடுப்பில் தேர்வு செய்யப்படும், ஒரு நாடகம் அரங்கேற்றப்படும்.
தமிழ் நாடக உலகில், முதல் முறையாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரயில் பிரியா நாடகக் குழுவினர், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ஆதரவோடு, இம்முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.
சென்னையில் இன்று, ‘நாடக தேர்தல்’
Popular Categories




