வாணிபோஜன் ‘திறமை’ காட்டும் லாக்கப் !

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
lock up vanibhojan - 2026

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்” தயாராகி வருகிறது.

தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான “ஜருகண்டி” படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார்.

தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர்!

lockupteam - 2026

அண்மையில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

lockup - 2026

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.