
ரஜினிகாந்த் பாஜகவில் இணைவார் என யாரும் கூறவில்லை என முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, திருவள்ளுவரின் படைப்புகளில் ஆத்திகம் உள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை திமுக மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.
திருவள்ளுவருக்கு விபூதி பூசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என திமுக கூறுகிறதா? திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே பொதுவானது. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.
அதை எதிர்கொள்ள முழு வீச்சில் செயல்பட்டு வருகிறோம். ரஜினிகாந்த் பாஜகவில் சேரவுள்ளார் என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.