பெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு!

சென்னை தமிழகம் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
vijayendra saraswathi swamigal - 2026

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… பல காலமாக பலருடைய பக்தி, சேவை, விருப்பம், தியாகம் , சகிப்புத்தன்மை, உழைப்பு, திறமை மற்றும் அனைத்து பெரியோர்களின் ஆசிகளால் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் பணியில் ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆசியுடன் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆர்வமும் முயற்சியும் கவனிக்கத்தக்கவை மற்றும் முக்கியமானவை

பாரத தேசம் முழுவதும் உள்ள கோவில்கள் குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள கோவில்கள் அழகான ஆசாரமான மற்றும் அனுக்கிரகம் வழங்கும் கோவில்களாக வளர்ச்சி அடைவதற்கு எல்லோரும், அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் தனி மனிதர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அந்த கோவில்கள் நியமம் மற்றும் நிர்வாகத்தின் அனுபவத்துடன் முழுமையான முன்னேற்றம் காண முயற்சிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.