பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டியில் 10ம் வகுப்பு மாணவன், கொக்கு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி காட்டுக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி மோகன் (38). இவரது மகன் ஜனா (15).
இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இவன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற வந்தான கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 1ம்தேதி மாணவன் மோகன், கொக்கு மருந்து குடித்து மயங்கி கிடந்தான்.
இதனையடுத்த உடனடியாக அவனை பெற்றோர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னா் மேல் சிகிச்சைகாக சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் ஜனா நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



