pasta bhayasam - 2026

பாஸ்தா பாயாசம்
தேவையான பொருட்கள் :

பாஸ்தா – 1 1/4 கப்
பால் – 3 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 1/2 tsp
நெய் – 1 tsp
முந்திரி – 5

செய்முறை :

முதலில் தண்ணீரில் பாஸ்தாவை வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கிண்ணம் வைத்து பால் கொதிக்க வையுங்கள். பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து கலக்குகள். அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து கிளறுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு சிறு தீயில் கொதிக்க வையுங்கள். தேவையான பதம் வந்ததும் நெய் முந்திரி போட்டு தாளித்து பாயாசத்தில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா பாயாசம் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending