திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்! எப்படி?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
thiruneeru - 2026

“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” :

வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.

இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்
திருநீறு இட்டார் கெட்டார்..
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள்.

உடன் வந்தவர், “காலம் கெடட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.

variyar - 2026

அதற்கு வாரியார், “இல்லை… சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.

“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார்.

அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார்.

“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்…. அடுத்தது,

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.

அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.