அன்று வெட்டினர்… இன்று நிறைந்தது… குளத்தில் நிறைந்த தண்ணீர்; மக்கள் ஆனந்தக் கண்ணீர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sevabarathi pond3 - 2026

சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் என்விரான்மெண்டலிஸ்ட் ஃபௌண்டேஷன் ஆஃப் இண்டியா (Environmentalist Foundation of India) இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் விவசாயிகளுக்காக புதியதாக குளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அண்மையில் பெய்த மழையால் அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன்மூலம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

sevabarathi pond2 - 2026

நேற்று அந்தக் குளத்தைப் பார்வையிடுவதற்காக சேவாபாரதி தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் கா. சீனிவாசன், மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால், ஆர்.எஸ்.எஸ். மாம்பலம் மாவட்ட தொடர்பாளர் ராம்மோகன் Environmentalist Foundation of India பொறுப்பாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

sevabarathi pond1 - 2026

அப்போது கிராமத்தினர் தங்களது மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.