கனமழைக்கு… வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த பாம்புகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
snake-in-kadappa

கடப்பா மாவட்டத்தில் பெரும் மழை. வீடுகளுக்குள் பாம்புகள்.

கடப்பா மாவட்டம் கண்டிகோட்ட பிராஜெக்ட் தாழ்மட்ட இடங்களில் மக்கள் தீவிரமான தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிலைமை மோசமாகி விட்டது. தற்போது பெய்து வரும் பெரு மழையால் கண்டிகோட்ட ப்ராஜெக்டில் நீர் பெருமளவு வந்து சேருகிறது.

அதற்குள்ளே 12 டிஎம்சிக்கு மேலாக தண்ணீர் சேர்ந்து விட்டதால் தாழ்வான பகுதியில் இருக்கும் கிராமங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பாம்புகளும் தேள்களும் புழுக்களும் வீடுகளுக்குள் புகுகின்றன. இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

kadappa-flood

ஆனால் பேக் வாட்டர் அதிகமாகாமல் கண்டிகோட்ட அணையிலிருந்து பிற அணைகளுக்கும் அங்கிருந்து பென்னாநதி தாழ்மட்டப் பகுதிக்கும் நீரை அனுப்பு கிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். நீர் சேரும் இடங்களில் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.ட்

kadappa

” எங்கள் வீட்டுக்குள் பாம்பு வருகிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றால் வீட்டை காலி செய்து விட்டு போங்கள் என்று கூறுவது எவ்வாறு சரி?” என்று கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.