நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி!

இந்தியா சற்றுமுன் வணிகம்
rbi - 2026

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

அந்த வங்கியின் நிதி நிலைமையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் 60 சதவீத வாடிக்கையாளர்கள் முழுப்பணத்தையும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள வங்கிகளின் கிளைகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.