
இலவச உள்ளாடைகள் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர்கள் என பெண்களிடம் பேசி பதிலுக்கு அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர். போலி கடன் திட்டம், ஆன்லைனில் பெண்களை தொடர்பு கொண்டு ‘இலவச உள்ளாடை திட்டம்’ என மோசடி செய்த அந்த பலே ஆசாமி மீது 420, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தின் சந்கேதா பகுதியைச் சேர்ந்த சூரஜ் கேவ்லே (வயது 25) என்ற இளைஞர், 18 வயது பெண் ஒருவரை தொடர்பு கொண்டு விளம்பரத்திற்காக இலவசமாக உள்ளாடைகள் தருவதாக கூறி பேசியிருக்கிறார். இதற்காக தங்களின் சுய விவரங்களை தருமாறும் அவர் கோரியிருக்கிறார். இதன் பின்னர் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து தொல்லை அளித்ததாக
கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண் அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளித்தன் பேரில் சூரஜ் கேவ்லேவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி, 354 டி (பின் தொடர்ந்தல்), 500 (மான நஷ்டம் ஏற்படுத்துதல் மற்றும் ஐடி பிரிவு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது போல மேலும் சில பெண்களுக்கும் அவர் வலை வீசியது தெரியவந்தது.
இவர் மேலும் ஒரு மோசடியில் சம்மந்தப்பட்டிருப்பது சைபர் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதன் படி அகமதாபாத்தை சேர்ந்த மேலும் ஒருவரை அவர் ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
ஆன்லைனில் தொடர்பு கொண்ட ஒருவர் 5.8 லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி அதற்கான முன் மாதாந்திர செலுத்த தொகையாக 1.35 லட்சத்தை தன்னுடைய பே-டிஎம் கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அதனை நம்பிய புகார் அளித்த நபரும் சூரஜின் கணக்கிற்கு 1.35 லட்சம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர் சூரஜ்-ன் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது எனவும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கும் சூரஜ் மீது பதிவு செய்யப்பட்டது.இது போன்ற மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாமல் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.