மன தைரியத்துடன் போராடுங்கள்: கொரோனாவிலிருந்து மீண்ட விஷால் அறிவுரை!

சற்றுமுன் சினிமா தமிழகம்
vishal-1

நடிகர் விஷால் மற்றும் அவர் அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது இருவரும் குணமடைந்துவிட்டனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முதலில் பயப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ள அவர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் எப்படி இதை எதிர்கொண்டோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் .

இதற்கு மன தைரியம் இருக்க வேண்டும். அந்த தைரியத்துடன் மருந்துகள் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக குணமாகும். அவ்வாறு தான் குணமடைந்தோம் . இதைபோல் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார். .

என் தந்தை, நான், மானேஜர் ஹரி மூவருமே கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம். இப்போது எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் வந்து விட்டோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.