அரசியல்வாதிகள் வெளியேற வேண்டும்; கோவில்களுக்கு தனி வாரியம் வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி
hrnce office - 2026

அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்; கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்; கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்; கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை:

தமிழக திருக்கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் கோவிலை மையமாகக் கொண்டு செயல்படும் வழிபாடு மற்றும் சேவைப் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்டவை. அதை பராமரிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

அரசியல்வாதிகள் ஆலய சொத்துக்களை அரசின் பெயரால் கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும். கருணாநிதி தொடங்கி ஸ்டாலின், வீரமணி வரை கோயில் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் அரசியல்வாதிகள் ஸ்டாலின் போன்ற இந்து விரோதிகள், வீரமணி போன்ற ஆன்மீக நம்பிக்கையற்றவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், இவர்கள் கோவில் அருகில் வருவதற்கே அருகதை அற்றவர்கள்.

இவர்கள் இந்துக்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறார்கள். இது கிறிஸ்துவ முஸ்லிம்களிடம் விலை போனதன் விளைவு. கோவில்களில் தமிழ் என்பார்கள். மசூதிகளில் தமிழ் என்று சிணுங்குவது கூட இல்லையே! கொஞ்சி குலாவி கஞ்சி குடித்து வருவார்கள். சர்ச்சுகளில் ஆமென் என்று சொல்லி ஓட்டுப் பிச்சை நோட்டுப் பிச்சைக்கும் மண்டி இடுவார்கள். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தானே! அங்கே தமிழ் உரிமை கேட்ட இந்தக் கழக இடதுசாரி கூட்டணி கும்பல்களுக்கு திராணி இல்லாமல் போனது ஏன்? ஒரே காரணம் ஓட்டும் நோட்டும் இவர்களது கையைக் கட்டிப் போட்டுள்ளது!

இப்போது ஸ்டாலின் வீரமணி இடதுசாரி கும்பல்கள் கோயிலை மத்திய அரசு எடுக்கக்கூடாது என்று கூறுவது, கோயில் சொத்தை கொள்ளை அடிக்கத் தான் என்பது தெளிவாக தெரிகிறது! விஷ்வ ஹிந்து பரிஷத் தெளிவாக 1966 இல் இருந்து திரும்பத் திரும்பக் கூறுகிறது… அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்! கோவில்களுக்கு தனி வாரியம் உருவாக்கிட வேண்டும்! அதில் ஆன்மீகப் பெரியோர்கள், மடாதிபதிகள், ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்கள் (அரசியல் இல்லாத) கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்! அயோத்தி தீர்ப்பில் நீதிமன்றமும் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசும் இதை செய்துள்ளன.

இதுவே கோவில்களைப் பராமரிக்கவும் சொத்துகளை காப்பாற்றவும் முறையாக பூஜைகள் செய்வதற்கும் நிரந்தர தீர்வாக அமையும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் பிஎம் நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

1 thought on “அரசியல்வாதிகள் வெளியேற வேண்டும்; கோவில்களுக்கு தனி வாரியம் வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.