சிவகாசியில் நிருபர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்: பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்!

Published:

sivakasi reporter - 2026

தனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி

இன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று சிவகாசி – இன்று சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு – தொடரும் தாக்குதல்கள்.
மிரட்டப்பட்ட விண் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் .*
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

இன்று 04-03-2020 புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை புளியந்தோப்பில், பொது சுகாதாரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற வின் டி.வி., நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை மிரட்டிய சமுக விரோத கும்பல் ஒளிப்பதிவு கருவியை அபகரித்து காட்சிப்படுத்திய ஒளிப்பதிவை அழிக்கச் செய்துள்ளனர்.
இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பத்திரிகையாளர்களின் வாகனத்தை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகிலேயே கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.இந்த தாக்குதல் மிரட்டல் சம்பவத்தைப் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. விண் தொலைக்காட்சி செய்திக் குழுவினரை மிரட்டிய- தாக்குதல் நடத்திய சமுக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் சென்னை மாநகர காவல்துறையை வலியுறுத்தியும்.

*சிவகாசியில் செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் என்ற செய்தியை பகிரும் நேரத்தில் இன்னொரு தாக்குதல் என்பது *தமிழகத்தில் பத்திரிகையாளர்கள்பாதுகாப்பைவெளிச்சம் போட்டு காட்டும் அவலம்.*
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன்
*இன்று 04-03-2020 மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது.

பாரதிதமிழன் (இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்)

***

சிவகாசி பத்திரிக்கையாளர் கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரியும் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளை காவல்துறையினர் சரிவர கையாளாத நிலையினை சரி செய்ய கோரியும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் நாளை 05.03.2020 காலை 10 மணிக்கு விருது நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நமது தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ளது அந்தந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் இந்த போராட்டத்தில் ஒற்றுமையுடன் அனைவரும் கலந்து கொண்டு ஒற்றுமையினை வெளிக்காட்டுவதுடன் நம் பலமே நமக்கான பாதுகாபு என்பதை நிரூப்பிக்க வேண்டிய தருணம் இது

மிதார் மைதீன், செயலாளர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர், பாதுகாப்பு நலச்சங்கம்

***

சிவகாசியில் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்; டியூஜே கண்டனம்

தனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டி.யூ.ஜே சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

  • டி.எஸ்.ஆர்.சுபாஷ்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img