அரசின் கால்சென்டருக்கே போன் செய்து… முதல்வர் ஜெகன் பற்றி வத்தி வைத்த தெலுகுதேச தலைவர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jaganmohan - 2026

அரசின் கால் சென்டருக்கே போன் செய்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் முதல்வர் ஜகன் மீது புகார் பதிவு செய்தார்.

ஆந்திரா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள கால் சென்டருக்கு போன் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் வர்ல ராமையா ஆந்திர முதல்வர் ஜெகன் மீது புகார் அளித்தார்.

ஊழல் புகார்களுக்காக ஆந்திர அரசு 14400 என்ற எண் கொண்ட கால் சென்டர் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள் ஊழல் தொடர்பான புகார்களை இந்த கால் சென்டர் நம்பருக்கு போன் செய்து தெரிவிக்கும்படி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

அந்த கால் சென்டருக்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் வர்ல ராமையா போன் செய்தார். தந்தையின் அதிகாரத்தை சாக்காகக் கொண்டு ஜெகன் ஆயிரம் கோடிகள் சம்பாதித்துள்ளார் என்று வர்ல ராமையா கால்சென்டர் பிரதிநிதிகளிடம் புகார் செய்தார்.

புகாரை தலைமை செயலகத்திற்கு எடுத்துச் சென்று யாராவது அதிகாரிகளிடம் கொடுக்கும்படி கால் சென்டர் ஊழியர்கள் வர்ல ராமையாவிடம் கூறினர்.

முதல்வர் ஜகன் அறிவித்த விதமாக, தான் அளித்த புகாரின் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

தன் மீது ரூபாய் 43 ஆயிரம் கோடி ஊழல் சொத்து இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று ஜெகன் எவ்வாறு கூறுகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.