டாஸ்மாக் இருக்கும் ஊரில் குடியிருக்க மாட்டோம் பொதுமக்கள் போராட்டம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
Resized P6I8Q - 2026

திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை
ஊரை காலி செய்வது போல் பாசாங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஜுன் 1ஆம் தேதி முதல் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுக்கடை அருகில் பந்தல் அமைத்து, சமையல்
செய்து சாப்பிட்டு வரும் அவர்கள் தினந்தோறும் புதிய நூதன யுத்திகளைப்
பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தின் 11வது நாளான ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் ஊரில் குடியிருக்க
முடியாது என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் பெட்டி, படுக்கையுடன் ஊரை
காலி செய்வது போல் சிறிது தூரம் சென்றனர் தொடர்ந்து மன உறுதியுடன் போராடும்
மக்களை பக்கத்து கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.