நித்யானந்தாவின் கைலாச நாட்டில் செட்டில் ஆக விரும்பும் அஸ்வின்..!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
aswin - 2026

நித்தியானந்தா புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாஷ் என பெயர் வைத்துள்ளதாகவும், அதனை ஹிந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும் ஒரு தகவலை இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.

உலகின் ஒரே ஹிந்து நாடு என்று அறிவித்து, அதற்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் விசா, அமைச்சர், அதிபர் என்றெல்லாம் பட்டியல் போட்டு விட்டதாகவும் தகவல்களை விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நித்தியானந்தாவின் கைலாச நாட்டில் செட்டில் ஆக விரும்புகிறார் நம்ம ஊரு கிரிக்கெட் கிங் அஸ்வின் ரவிச்சந்திரன்.

அந்த ஆர்வத்தில், ‘கைலாசம் தீவுக்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன?’ என்று டிவிட்டரில் ரொம்பவே சீரியஸாக கேள்வியைக் கேட்டு, தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார். அவரது டிவிட் இப்போது வைரலாகி இருக்கிறது.

ஆமாம்… அஸ்வின் ஆசைப்படுற அளவுக்கு கைலாஷ்ல அப்படி என்ன இருக்கும்?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.