திருப்பதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம்!

Published:

kcr rao tirupathi 1 - 2026

திருப்பதி எழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திருப்பதி வந்தார். திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் மகாதுவாரம் (முன் வாசல்) அருகே தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ் , தலைமையில் அர்ச்சகர்கள் கோயில் மரியாதையுடன் சந்திரசேகரராவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

இதை அடுத்து சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி திருப்பதி அடுத்த தும்மலகுண்டாவில் கட்டிய கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்ற சந்திரசேகரராவ் அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார் தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ்.

Related articles

Recent articles

spot_img