- 2026

ரீபண்ட் தொகை: வருமான வரித்துறை தகவல்!

சற்றுமுன்
- 2026

வருமான வரித்துறை 2.07 கோடி பேருக்கு சுமார் 1.83 லட்சம் கோடி வரை வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது

இதுவரை நடப்பு நிதியாண்டில்2.07 கோடி பேருக்கு சுமார் 1.83 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தபட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்தியில், “2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 1-ஆம் தேதி வரை 2.07 கோடி வரி செலுத்துவோருக்கு1,82,995 கோடி ரூபாய் வருமான வரி ரீபண்ட் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 2,30,112 நிறுவனங்களுக்கு 1,17,498 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி பணம் செலுத்தப்பட்டுள்ளது. மற்றும் 2021-21 ஆம் ஆண்டில் மதிப்பீட்டு ஆண்டுக்கான ரீஃபண்ட் தொகை 33,818.97 கோடி ரூபாய் 1.67 கோடி பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.