சூரிய புரோட்டான் நிகழ்வுகளை கண்டறிந்த சந்திரயான்-2 விண்கலம்: இஸ்ரோ தகவல்!

isro - 2026

நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது.

பல்வேறு கட்டத்துக்குப் பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை.

திடீர் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாகச் சென்று நிலவின் தரையில் மோதியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விண்கலத்தின்மற்றொரு பகுதியான ஆர்பிட்டர்,நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் பல்வேறு தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான் விண்கலம் கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ‘இஸ்ரோ’ கூறியதாவது: சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர் கருவியானது சூரியனின் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்கள், அயனியாக்கம் செய்யப்பட்ட துகள் மற்றும் காந்தப்புலங்களின் சக்திவாய்ந்த ஓடை ஆகியவற்றைக் கடந்த ஜன.18-ம் தேதி பதிவு செய்துள்ளது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இந்த வெப்ப வெளியேற்றங்கள்தான் புவி காந்தப் புயல்களுக்கும், வானத்தில் துருவ ஒளியை ஒளிரவும் வழிவகுக்கிறது. இத்தகைய சூரிய புரோட்டான் நிகழ்வுகளின் தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு கிரக அமைப்புகளில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பது புரிந்துகொள்ள உதவும்.

சூரியன் மிக உக்கிரமாக இருக்கும்போது, ​​சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் ஏற்படுகின்றன. அப்போது சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களே ஆகும்.

இந்த ஆற்றலின் சக்திக்கு ஏற்ப, அவை விண்வெளியைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதில் ஏற்படும் கதிர்வீச்சு விண்வெளி நிலையங்களில் இயங்கும் மனிதர்களைப் பாதிக்கிறது.

மேலும், பூமியின் நடுத்தர வளிமண்டலத்தில் பெரிய அளவில் அயனியாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவைன சூரியவெடிப்பில் ஏற்படும் பிழம்புகளின் வலிமைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன.

ஏ – மிகச்சிறியவை. அதைத் தொடர்ந்து பி,சி,எம் மற்றும் எக்ஸ் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 1 முதல் 9 வரையிலான நுணுக்கமான அளவுகளும் உள்ளன. உதாரணமாக எம்2 என்பது எம்1-ஐ விட 2 மடங்கு வலிமை கொண்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அதன்படி, சமீபத்தில், இரண்டு எம் வகுப்பு அளவுள்ள வெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றில், ஒன்று எம் 1.5 அளவில் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்களுடனும், மற்றொன்று எம் 5.5 அளவுக்கு ஆற்றல்மிக்க துகள்களையும் கிரகங்களுக்குள் செலுத்தியுள்ளது.

இந்த சூரிய புரோட்டான் நிகழ்வைப் பூமியைச் சுற்றி வரும் நாசாவின் புவிசார் செயல்பாட்டுச் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் (GOES) கண்டறியவில்லை.

ஆனால், நிலவைச் சுற்றி வரும் நமது சந்திரயான் -2 தனது மென்மையான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் இந்த நிகழ்வைக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடையாமல்போனதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக சோர்வடைத்திருந்தனர்.

ஆனால், தற்போது நாசாவுக்கு சிக்காத அறிய தகவல்கள் சந்திரயான்-2வின் ஆர்ப்பிட்டரில் சிக்கி உள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களேயாகும்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories