ஆரோக்கிய சமையல்: ராகி தட்டு வடை!

சற்றுமுன்
ragi - 2026

ராகி தட்டு வடை

தேவையானவை:

ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்,

பொட்டுக்கடலை மாவு – கால் கப்,

பொட்டுக்கடலை – கால் கப்,

பச்சை மிளகாய் – 2,

ஓமம் – கால் டீஸ்பூன்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிது,

உப்பு – தேவைக்கேற்ப,

எண்ணெய் – பொரிக்க.

செய்முறை:

ragi thattu vada - 2026

பச்சை மிளகாய், ஓமம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, அரைத்த விழுது, பொட்டுக்கடலை ஆகியவற்றைப் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சற்று தடி மனான தட்டைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் வடித்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.