ஆரோக்கிய சமையல்: பச்சைப் பயறு புட்டு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
green gram - 2026

பச்சைப் பயறு புட்டு

தேவையானவை:

பச்சைப் பயறு – ஒரு கப்,

வெங்காயம் – ஒன்று,

காய்ந்த மிளகாய் – 3,

தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

green payar - 2026

பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.

மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் உதிர்க்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும். வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.