ஊட்டி யில் களைகட்டும் ஜில் ஜில் சீசன்..

Published:

ஊட்டி யில் களைகட்டும் ஜில் ஜில் சீசனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஊட்டியில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஊட்டியில் கூட்டம் அலைமோதுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. செடிகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு, தொட்டிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு , அரசினர் ரோஜா பூங்கா,குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு மிக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அதேபோல ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லாறு பழப்பண்ணை ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மேலும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, அவலாஞ்சி, மேல்பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து. படகு சவாரி செய்தும், இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலை கடந்த ஆண்டு பெய்த மழையால் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கடந்த விடுமுறை தினங்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், தொலைவிலுள்ள மலைப் பகுதிகளையும் காண நீண்ட வரிசையில் காத்திருந்து, இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஊட்டி மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
images 2022 03 29T172550.945 - 2026
images 2022 03 29T172616.772 - 2026
images 2022 03 29T172604.190 - 2026

Related articles

Recent articles

spot_img