சீதையை கடத்தி சென்றது ராமர் : குஜராத் பாடபுத்தகத்தில் குழப்பம்

Published:

12 June01 rama - 2026குஜராத் மாநிலம் பிளஸ் 2 சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ‘ரகுவம்சம்’ என்ற தலைமைப்பில் சமஸ்கிருத கவிஞர் காளிதாஸ் எழுதிய கவிதை இடம்பெற்றுள்ளது.
இதில், ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராவணன் என்பதற்கு பதிலாக ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து மாநில பள்ளி பாடநூல் கழக நிர்வாக தலைவர் நிதின் பதேனியிடம் கேட்ட போது, முதலில் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார். பின்னர் தவறை ஒப்புக் கொண்ட அவர், இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகும். இதில் ராவணன் என குறிப்பிடுவதற்கு பதிலாக ராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குஜராத் பாடநூல் கழகத்தின் தவறு இல்லை என பதிலளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img