திருமணமாகி 6 மாதம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவி! கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Jakir-musila-1
Jakir-musila-1

மனைவி மீது இருந்த சந்தேகம் காரணமாக தூக்கிக் கொண்டிருந்த அவரை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜாகீர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு ஜாகீர் மனைவி மீது தொடர்ந்து சந்தேகம் கொண்டு வந்துள்ளார். இதனால் அவரே பலவற்றை கற்பனை செய்து கொண்டு பாதிக்கப்பட்டார். மனதளவில் அமைதி இன்றி இருந்த அவர் இரவில் தூங்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு விழித்துக் கொண்டிருந்த அவர் திடீரென தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி முசிலாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

முசிலாவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஜாகீரை கைது செய்தனர். அவர்கள் கொலையை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.