ஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
try pongal - 2026

டிரை ப்ரூட்ஸ் பொங்கல்

தேவையானவை

பிரவுன் ரைஸ் – 1/4 கப்
தண்ணீர் – 3 கப்
முந்திரி – 10
உலர்திராட்சை – 10
முந்திரி – 5
பாதாம் – 10
பிஸ்தா – 10
பேரீச்சை சிரப் – முக்கால் கப்
நெய் – 1 ஸ்பூன்
பேரீச்சை – 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை

முதலில் ஒரு பவுலில் முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விட்டு, பிறகு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.

அரிசி நன்கு வெந்ததும், டேட்ஸ் சிரப்பை சேர்த்துக் கலந்து வேக விடவும். வாணலியில் நெய் சூடானதும், சிறிதளவு முந்திரி, நறுக்கிய டேட்ஸ் சேர்த்து பொரித்தெடுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.