பொங்கலில்… தமிழக அரசு… ‘அசுர’ சாதனை!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
modi remove tasmac bottle - 2026

அரசு.. அசுர சாதனை படைத்தது இதில்தான்! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் மட்டும் 605 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

பொங்கல் பண்டிகை கடந்த 15ந்தேதி கொண்டாடப்பட்டது. மறுநாள் திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 14ஆம்தேதி போகி அன்று 178 கோடி ரூபாய்க்கும், 15 ஆம் தேதி பொங்கல் தினத்தில் 253 கோடி ரூபாய்க்கும், 17ஆம் தேதி காணும் பொங்கல் தினம் அன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TASMAC - 2026

அதிக பட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.