மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன? இப்படிக் கேள்வி எழுகிறது. இது போன்ற கேள்வி புதிதல்ல.
தந்தையின் செருப்பை அணிந்து கொண்டு ஒரு குழந்தை கேட்டது, ” அப்பா எதுக்கு இவ்வளவு பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்கிறார்?” இந்தக் குழந்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் புரியாது.. அதற்கு இன்னும் அறிவு வளரும்போதே புரியும்.. அது போலத்தான் மாத விலக்கு காலத்தில் பெண்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்.
நிச்சயமாய் அனுமதிக்கலாம்.. கோயிலுக்குள் நிச்சயமய் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும் என்பவர்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே நிச்சயமாய் அனுமதிக்கலாம். பாரம்பர்யப் பழக்கவழக்கம் உடைய கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது ‘பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று மூக்கை நுழைப்பது போன்றதுதான்.
கோயில் என்பது ஏதோ தெய்வ சிலையை வழிபட்டு விட்டு பிரசாத்தை வாயில் அடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது என்ற வழக்கமாக்கி கொண்டு விட்ட காலத்தில் எதை வேணா கேள்வி கேட்கலாம்தான். கோயில் என்பதும் கழிப்பறை போல ஆகி விட்டது. உடல் கழிவைப் போக்கக் கழிவறை போன்று மனக் கழிவுகளைக் கொட்ட கோயில் என்றாகி விட்டது. புலம்புவதற்கு ஒரு இடம் அது என்றாகிவிட்ட நிலையில் எதை வேணா பேத்தலாம். ஆகம பாரம்பர்யங்களை புரிதல் இன்றி கேள்வி கேட்கலாம்..
தன்னுடய அபிலாஷை, பேராசைகளை, தீர்த்துக் கொள்ள கோயில் சாமி என்றாகி விட்ட பின், நுகர்வு மனப்பான்மையில் எதை வேணா கேள்வி கேக்கலாம்தான்.
அறமற்ற துறை நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்ட பின் கோயில் என்பதும் வியாபாரத் தலம் ஆகிவிட்ட நிலையில் கோயில் விதிகள் எதை வேண்டுமானாலும் மாற்றியாகி விட்டது
கோயில் என்பது சக்தி மையம். கோயிலை சுற்றித்தான் பாரதீயர்களின் வாழ்க்கை முறை இருந்து வந்தது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஔவைக் கூற்று. ஆகம விதிப்படி அமைந்த பாரம்பர்யக் கோயில்களின் விதிகளைப் பற்றி தாந்தோன்றித்தனமாகக் கேள்வி எழுப்பாமல் மரபை மதிக்கப் பழக்கிக் கொள்ளுங்கள்.
மாத விலக்கு காலத்தில் கோயிலுக்குப் போவதைப் பற்றி பக்தி நிரம்பிய பெண்கள்(தாய்மார்கள்) முடிவு செய்து கொள்வார்கள்.
-வி.ரங்கநாதன்




