காங்கிரசும் மற்ற கட்சிகளும் “2019இல் பாஜக கூட்டணி மீண்டும் வந்தால் அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற திட்டமிடுகிறார்கள். சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க திட்டமிடுகிறார்கள்” என்று ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அரசியலமைப்பை பாராளுமன்றம் தன் விருப்பப்படி மாற்றவோ திருத்தவோ முடியுமா? பாராளுமன்றத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கபப்ட வாய்ப்புள்ளதா? ஒரே கட்சி அத்தனை இடங்களிலும் வென்று பெரும்பான்மையுடன் இருந்து அரசியலமைப்பை தன்னிஷ்ட்டப்படி மாற்ற இயலுமா? இப்படி அரசியலமைப்பை முற்றிலும் மாற்றுவது சாத்தியமா என்றால் இல்லை என்பதே பதில்.
ஏப்ரல் 24, 1973இல் கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற 13 பேர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், “பாரத பாராளுமன்றத்தின் அத்தனை உறுப்பினர்களும் சம்மதித்தாலும், பாரத அரசியலமைப்பை அதன் ’அடிப்படை கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய அம்சங்களை மாற்றாத வகை’யில் மட்டுமே திருத்த இயலும்” என்று உறுதி அளித்திருக்கிறது.
எனவே, இப்போதிருக்கும் அரசியலமைப்பை செல்லாததாக அறிவித்து புதியதோர் அரசியலமைப்பை திணிக்க இயலாது.
இது இப்படியிருக்க, இந்த காணொளியில் ஆ ராசா கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார். குறிப்பாக, “இது மதச்சார்பற்ற செக்குலர் நாடல்ல என மோடி அறிவிக்க போகிறார்” என பயமுறுத்துகிறார் ராசா. வழக்கறிஞரான ராசாவுக்கு மறந்து போயிருக்கும் இந்த செக்குலர் வார்த்தையை அரசியலமைப்பில் தேவையில்லாமல் திணித்தது இந்திரா என்று.
மேலும், மத தெரசாவுக்கு “இந்தியா” நோபல் பரிசு கொடுத்ததாக சொல்கிறார். அமெரிக்கா பட்டம் கொடுத்ததாகவும் சொல்கிறார்.
நோபல் பரிசு கொடுக்க இந்தியாவில் கிளை ஆரம்பித்திருந்தார்களோ தெரியாது.
அது போக, மத தெரசா தனக்கு நன்கொடை அளித்த அமெரிக்கருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை கொடுத்ததை எதிர்த்து அமெரிக்க நீதிபதிக்கு, ‘அவர் ஒரு கிறிஸ்தவர். அவரை மன்னியுங்கள்” என கடிதம் எழுத, அதற்கு பதிலாக, “எங்கள் நீதி மன்ற செயல்பாட்டில் தலையிடுவது குற்றம்” என்று கூறி எச்சரித்தார். அந்த குற்றவாளியும் சிறை சென்றார். அதே வேலையை இன்று தெரசா செய்திருந்தால், “நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றத்துக்காக மத தெரசாவை சிறையில் தள்ளுங்கள்” என பொதுநல வழக்கு தொடுத்திருப்பார்கள்.
நன்கொடை கொடுத்தது குற்றவாளி என்று தெரிந்தும் அந்த பணத்தை திருப்பி அனுப்பவில்லை மத தெரசா. அப்பேர்ப்பட்ட புனிதர் அவர்.
அவருக்கும் வக்காலத்து வாங்குகிறார் ஸ்தோத்திரம் பாடும் ராசா.
Kesavananda Bharati v State of Kerala – The case that saved Indian democracy: All this effort was to answer just one main question: was the power of Parliament to amend the Constitution unlimited? In other words, could Parliament alter, amend, abrogate any part of the Constitution even to the extent of taking away all fundamental rights?
The 703-page judgment revealed a sharply divided court and, by a wafer-thin majority of 7:6, it was held that Parliament could amend any part of the Constitution so long as it did not alter or amend “the basic structure or essential features of the Constitution.” This was the inherent and implied limitation on the amending power of Parliament. This basic structure doctrine, as future events showed, saved Indian democracy and Kesavananda Bharati will always occupy a hallowed place in our constitutional history.
https://www.thehindu.com/opinion/op-ed/the-case-that-saved-indian-democracy/article4647800.ece




