நெல்லை மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் வைத்து 19/08/18 அன்று மதியம் 1.30 மணி அளவில் 21- வது நூல் விமர்சனப் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் கவிதாயினி க. இராமலெட்சுமி ஜெய் கணேஷ் எழுதிய “தேன்கூடு” என்ற நூல் விமர்சனப் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் (6 லிருந்து 60 வயது வரை) அன்பர்கள் நூலகம் வந்து அந்த நூலை இலவசமாக பெற்று கொண்டு போட்டி அன்று நேரில் வந்து 4 பக்கம் குறையாமல் விமர்சனம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
சிறந்த விமர்சனம் எழுதும் 10 பேருக்கு பரிசு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9486984369 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செங்கோட்டை முழு நேர நூலக நூலகர் கோ.ராமசாமி தெரிவித்துள்ளார்.




