Homeஇந்தியாதுரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் சாபம்... சும்மா விடாது!

துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் சாபம்… சும்மா விடாது!

kashmiripandit - Dhinasari Tamil
- Advertisement -
- Advertisement -

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது? காஷ்மீர் பண்டிதர்களுக்கு நேர்ந்தது அந்தத் துயரம்தான்.

இந்த பண்டிதர்கள் யார்? முந்தைய காஷ்மீரின் ‘விதஸ்தம்’ என்ற பள்ளத்தாக்கு பூமியை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரித்துப் பாதுகாத்து வசித்து வந்தவர்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 19 , 1990 அன்று ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் மிரட்டலுக்குப் பயந்து இரவோடு இரவாக சுமார் 8 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் அந்த மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டி வந்தது. காரணம், அவர்கள் காஷ்மீரில் தொடர்ந்து வசிக்க மூன்றில் ஒரு நிபந்தனையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது….

காஷ்மீர் பண்டிதர்களின் துயரத்தையும், குடியுரிமைச் சட்டத்தின் பயனையும் தெரிந்து கொள்ள… தொடர்ந்து படியுங்கள்…

kashmiri pandits - Dhinasari Tamil

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை உடனடியாக வீட்டைக் காலி செய்யச் சொல்லி உடமையாளர்கள் சொன்னதும் குடியிருப்பவர்கள் எந்த மனநிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்? அந்தக் குடும்பத்தை எவ்வளவு குழப்பமும் குமுறலும் ஆட்கொள்கிறது?

இதற்கே இப்படியென்றால் அவரவர் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை; அதன் சட்டபூர்வமான உரிமையாளர்களை, அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்து விட்டு வெளியேறு என்று ஒரு பொது அறிவிப்பு வந்தால் அவர்கள் என்ன பாடு படுவார்கள்?

காஷ்மீர் பண்டிதர்களுக்கு நேர்ந்தது அந்தத் துயரம்தான்.

இந்த பண்டிதர்கள் யார்? முந்தைய காஷ்மீரின் ‘விதஸ்தம்’ என்ற பள்ளத்தாக்கு பூமியை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரித்துப் பாதுகாத்து வசித்து வந்தவர்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 19 , 1990 அன்று ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் மிரட்டலுக்குப் பயந்து இரவோடு இரவாக சுமார் 8 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் அந்த மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டி வந்தது. காரணம், அவர்கள் காஷ்மீரில் தொடர்ந்து வசிக்க மூன்றில் ஒரு நிபந்தனையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

முதலாவது, இஸ்லாமுக்கு மதம் மாறு!

இரண்டாவது, காஷ்மீரை விட்டு வெளியேறு!

மூன்றாவது, மீறி இருந்தால் செத்து மடியத் தயாராக இரு!

அவ்வளவுதான், உயிரையும் தங்களது குடும்பப்பெண்கள், குழந்தைகளின் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள, லட்சக்கணக்கில் காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேறினார்கள். வழியில் முடிந்தவர்கள் பலர். பிழைத்தவர்கள் கதைகள் கேட்பவர்களின் கண்களில் குருதி வரவழைப்பவை. ஆனால், அவர்களது துயரக்கதைகளைக் கேட்பதற்கோ, அதை பிரசுரிப்பதற்கோ, அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கோ இத்தனை பெரிய தேசத்தில் நாதியற்றுப் போய் விட்டிருந்தது.

இப்போதும், பெரும்பாலான ஊடகங்கள், நடுநிலை பேசுகிற நாய்ப்பிறவிகள், மதச்சார்பின்மை என்று மார்தட்டுகிற மனிதமிருகங்கள், இந்த காஷ்மீர் பண்டிதர்களுக்காக ஒரு வரி எழுதியதில்லை; ஒரு துளி கண்ணீர் சிந்தியதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தக் கொடூர நிகழ்வுகளை, முழுமையாக யாரும் பதிவு செய்யவில்லை என்பதே உண்மை.

kashmiri pandit pic - Dhinasari Tamil

இரக்கமே இல்லாமல் கை,கால்களைக் கட்டி, கொலை செய்து ஜீலம் நதியில் வீசி எறிந்தனர். ராணுவ அதிகாரிகள் தொடங்கி, சாமானியர்கள் வரைக்கும் எவரையும் தீவிரவாதிகளின் ரத்தவெறி விட்டு வைக்கவில்லை. ஆயிரக்கணக்கானோர் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, சுட்டுக் கொல்லப் பட்டனர். வெளியேறாமல் இருந்த ஹிந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து வயது வித்தியாசமின்றி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டனர். பிறகு, அந்தப் பெண்களை நிர்வாணமாக தெருவில் ஓடவிட்டு சுட்டுக் கொன்றனர். எழுத எழுத, வாசிக்கிற உங்கள் அனைவரின் ரத்தம் அமிலம் போல கொதிக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கொடூர சம்பவமாக விவரிப்பதைக் காட்டிலும், மேலே கூறிய சில காட்டுமிராண்டித்தனங்களே, ஜே.கே.எல்.எப், ஹிஜ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கொலைவெறிக்குப் போதிய சான்றுகளாய் இருக்குமென்று இத்தோடு நிறுத்திக் கொள்ள விருப்பம்.

காஷ்மீர் பண்டிதர்களுக்கு நிகழ்ந்தது உண்மையிலேயே ஒரு இனப்படுகொலையாகும். வீடுகள் கொளுத்தப்பட்டன; இந்து ஆலயங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டன. ஒரு மசூதியை இடித்ததை வைத்து இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கிற சந்தர்ப்பவாத கட்சிகள் ஒன்றுகூட, ஏறத்தாழ 800 இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை. நாசமாய்ப்போன மதச்சார்பின்மை.

kashmiri pandits1 - Dhinasari Tamil

காஷ்மீரில் சிறுபான்மையாக இருந்தும், பல்வேறு தொழில்கள் செய்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தல்களையும் தாண்டி, தங்களது பொருளாதாரத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநிறுத்திய காஷ்மீர் பண்டிதர்கள் திடீரென்று சொந்த நாட்டில் அகதிகளாகிப் போயினர். அவர்களது வளம், கலாச்சாரம் எல்லாம் ஓரிரு நாட்களில் மண்ணோடு மண்ணாக, உயிர் பிழைத்தால் போதுமென்ற ஒரே குறிக்கோளோடு இந்தியாவில் ஹிந்துக்கள் அதிகம் வாழும் மாநிலங்களை நோக்கிச் சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சிதறிப் போன காஷ்மீர் பண்டிதர்களின் பல குடும்பங்கள் சிதைந்து போயின. செழிப்போடு வாழ்ந்தவர்கள் பலர் தெருவோரம் சுருண்டு விழுந்து செத்தார்கள். எஞ்சியவர்கள், தங்களது வாழ்க்கையை மீண்டும் சீரமைக்கத் தலைப்பட்டார்கள். இத்தனை கொடுமைகளை அனுபவித்தபோதும், எந்த காஷ்மீர் பண்டிதரும் “பழி வாங்குகிறேன் பார்,” என்று ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது சொர்க்கம் பறிபோயிற்றே என்ற ஆதங்கத்தில், ஆத்திரத்தில் அவர்கள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், வாழ்ந்த இடங்களில் தங்களது அடையாளங்களை மீட்டு, தங்களது கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பித்து, தழும்புகளுடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

தற்போது, இந்தியாவில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற காஷ்மீர் பண்டிதர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. அங்கே சென்று தங்களது வாழ்க்கையை மீண்டும் துவங்க விரும்புகிறார்கள். சில நூறு பேர் ஏற்கனவே சென்று அங்கு தங்களது எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கவும் தொடங்கி விட்டார்கள்.

ஆனால், அவர்கள் பட்ட துயரம் எந்த சரித்திர புத்தகத்திலும் இடம் பெறவில்லை. அவர்களது அழுகுரலை உச்சநீதி மன்றம் கூட கேட்கவில்லை.

அவர்களை காஷ்மீரிலிருந்து விரட்டியடித்தது புதிதல்ல. வரலாற்றில் ஏழாவது முறையாக அது நடந்திருக்கிறது.

1 . முதல் வெளியேற்றம் ( 1389 – 1413 ) – ஷா மீர் இந்து தலைவர்களைக் கொன்று இஸ்லாமை நிறுவினான். கைலாஷ் ஆலயத்தை அழித்ததும், 37000 ஹிந்துக்களை விரட்டியதும் இந்தக் காலகட்டத்தில் தான்.

2 . இரண்டாவது வெளியேற்றம் ( 1506 – 1585 ) ஷியா பிரிவை சேர்ந்த சக்ஸ் காஷ்மீரை ஆண்ட காலம் அது. கட்டாய மதமாற்றம் செய்வதற்காக ஹிந்துக்கள் துன்புறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். பல ஆயிர இந்துக்கள் வெளியேறினர்.

3 . மூன்றாவது வெளியேற்றம் ( 1585 – 1753 ) மொகலாய சாம்ராஜ்யம். ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கஜீப் ஆகியோர் ஜிஸ்யா விதிப்பு முதற்கொண்டு இந்துக்களின் மீது பல அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். விளைவு? மேலும் சில ஆயிரம் ஹிந்துக்கள் வெளியேற நேர்ந்தது.

4 . நான்காவது வெளியேற்றம் (1753 ) பாக்கீருல்லா ஆட்சி. கொடுங்கோலன். அவனது முதலமைச்சர் பாசல் கான், இந்துக்களைக் கொன்று அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடித்தான். அப்போதும் பண்டிதர்களின் வெளியேற்றம் நிகழ்ந்தது.

5 . ஐந்தாவது வெளியேற்றம் ( 1931 ) – வரலாற்றில் கருப்பு நாளாகக் கருத வேண்டிய தினம் (13 -07-1931) . ஸ்ரீநகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கொடிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கனிக்கூட் என்ற இடத்தில் இந்துப்பெண்கள் கூட்டம் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டார்கள். கடைகள் சூறையாடப் பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன.

6 ஆறாவது வெளியேற்றம் ( 1986 ) முதலமைச்சராக இருந்தா குல் ஷா, தனது லஸ்கரி குல்ஷா பாதுஷா என்ற படையை காஷ்மீர் பண்டிதர்கள் வாழும் பகுதிகளை சூறையாட அனுப்பினான். ஆலயங்கள் சேதப்படுத்தப் பட்டன. அப்பாவி பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டனர். பசுக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டன. இந்திய அரசு கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது.

மேற்கூறிய ஆறு வெளியேற்றங்களைக் காட்டிலும் கொடூரமான வெளியேற்றம்தான், ஏழாவது முறையாக 1990 ம் ஆண்டு ஜனவரி 19 ம் தேதி நடந்தது அல்லது தொடங்கியது.

முப்பது ஆண்டுகளாய் அல்லல்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்கள், 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து சிறிது துணிவுடனும் நிறைய நம்பிக்கையுடனும் ‘ஹம் வாபஸ் ஜாயேங்கே ( நாங்கள் மீண்டும் போவோம்) ‘ என்று ஒரு கோஷத்துடன் உத்வேகமாய்க் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்துக்கும் இந்த தேசம் உரிய விலையை இன்னும் அளிக்கவில்லை என்பதே உண்மை.

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை வழங்கி, அவர்களை மீண்டும் அங்கே குடியமர்த்தி, அவர்களது வருங்காலத்தை வளமாக்குவதே அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

பாரத் மாதா கீ ஜே
(ஒரு ஹிந்தி கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

கட்டுரை: ஆர்.வேணுகோபாலன் (Venugopalan R)

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...