நாட்டின் இரண்டாவது தலைநகரம் அமராவதி: ஜெகனுக்கு பாஜக., அதிர்ச்சி வைத்தியம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
modi amitshaa - 2026
  • நாட்டின் இரண்டாவது தலைநகர் அமராவதியா?
  • ஒய்சிபிக்கு பிஜேபி அதிர்ச்சி வைத்தியம்.
  • மத்திய அரசின் பரபரப்பு ஆலோசனை.

ஆந்திரப் பிரதேச அரசியல், தலைநகரங்களைச் சுற்றி வரும் நிலையில் மறுபுறம் மத்திய அரசின் மனத்தில் மற்றுமொரு எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.

அமராவதியை ஒரு தலைநகராக இருத்திய படியே அதிகார விரிவாக்கம் என்ற பெயரில் எக்ஸிக்யூட்டிவ் தலைநகராக விசாகப்பட்டினம், ஜூடிசியல் தலைநகராக கர்னூல் இருக்கும் என்று ஆந்திர அரசு மசோதா எடுத்துவந்து சட்ட மேலவையில் ஒப்புதல் கிடைக்கச் செய்தது. ஆனால் மத்திய அரசு ஒய்சிபி.,க்கு டிவிஸ்ட் அளிக்க முடிவு செய்து காய்களை நகர்த்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

amaravathi - 2026

தென்னிந்திய மாநிலங்களில் பாஜக., நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் யாரும் யூகிக்க முடியாத ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு பிஜேபி தயாராகி வருகிறது. நாட்டின் இரண்டாவது தலைநகர் குறித்து தீவிர ஆலோசனையில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளன என்று கூறப்படுகிறது.

நாட்டின் இரண்டாவது தலைநகர் தென்னிந்தியாவில் இருக்க வேண்டுமென்று அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை அது போன்ற ஒரு யோசனையை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. இது கொஞ்சம் சிரமமே என்றாலும் தற்போது பாஜக., அதனை செயல்படுத்த முயற்சிக்கிறது. அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமராவதியை தேர்ந்தெடுத்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு முதலில் ஹைதராபாத் மீது பார்வை திரும்பியது. ஆனால் வரலாறு கலாச்சாரம் கடல்தீரம் தட்பவெட்பம் போன்ற அம்சங்களில் அமராவதி ஏற்றதாக இருக்கும் என்று முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் தென்னிந்தியாவையும் பெரிய அளவில் வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்தோடு மோடி அரசு உள்ளது.

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் சில திட்டங்களால் முன்னேற்றம் கண்டுள்ளன. அதே நேரம், தெலுங்கு மாநிலங்கள் பிரிந்து போனபின் ஆந்திராவுக்கு நிதி நிலைமை போதாமல் உள்ளது. அதனால் அமராவதியை இரண்டாவது தலைநகராக அறிவித்து அரசியலிலும் தென்னிந்தியாவில் தங்களுக்கு ஒரு நிலையான இடம் கிடைக்க பிஜேபி முயற்சிப்பதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.