திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு என்ற பிள்ளையார் சுழியை பாஜகவினர் ஆரம்பிக்க அதன் பின்னர் ராஜா தனது ஃபேஸ்புக்கில் கொளுத்தி போட்ட வெடியால் தமிழகத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிலும் பதட்டநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் காந்தி சிலை, உத்தப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி என வரிசையாக சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன
இந்த நிலையில் இன்று மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் உபி மாநிலத்தில் உள்ள அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையின் தலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும், இதனால் அந்த பகுதியில் பதட்டம் அதிகரிக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சிலை உடைப்பு விவகாரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா? என சமூகநல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.