சிஏஏ.,க்கு ஆதரவாகவும், ஆதரிப்பவர்களைத் தாக்கும் ஈனச் செயலைக் கண்டித்தும் இந்து முன்னணி பேரணி!

சற்றுமுன்
hindumunnani protest - 2026

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், CAA & NRC க்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் மீதான தாக்குதலை கண்டித்தும் 29.01.2020 புதன்கிழமை இன்று மாலை 3 மணிக்கு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. சென்னை, ராஐரத்னம் ஸ்டேடியம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தில், இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளிக்கும் மக்கள் பலர், தேசியவாதி எண்ணம் கொண்ட பெருவாரியான மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இன்று சென்னையில் CAA&NRC யை ஆதரித்தும்,
இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் நடை பெற்ற பேரணியில் பெருவாரியாக மக்கள் பங்கேற்றனர்.

hindumunnani protest1 - 2026

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த பேரணி,
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லீம் நாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட, அந்நாடுகளின் மத சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்த சட்டத்தை ஆதரித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்போர் மீது நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டித்தும் நடத்தப் பட்டது.

hindumunnani protest4 - 2026

29.1.2020 புதன் கிழமை மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முதல் சிந்தாதிரிப்பேட்டை ரமாடா ஓட்டல் ரவுண்டானா வரை இந்துமுன்னணி மாநகரத் தலைஅர் ஏ.டி. இளங்கோவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலச் செயலர் த. மனோகரன், மாநில பேச்சாளர் ராஜகுரு பாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

hindumunnani protest2 - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(CAB) ஆதரித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) ஆதரித்தும், இவற்றை ஆதரிப்போரை அச்சுறுத்தும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேரணியானது நடைபெற்றது.

hindumunnani protest3 - 2026

இதனை ஆதரித்து பல்வேறு சமுதாய பெரியோர்களும், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.