விளையாட்டாய் கிண்டல் செய்த தோழி! அசால்டாய் கொன்று எரித்த தோழன்!

உலகம் கிரைம் நியூஸ்
wait - 2026

இந்தோனேசியாவில் ரோசிடா என்ற பெண்ணும், அலி என் இளைஞரும் சிறு வயதில் இருந்தே ஒரே பகுதியில் வசித்து வந்திருக்கிறார்கள். இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இந்தநிலையில் அலியை பார்த்து ரோசிடா குண்டு பூசனிக்காய், குண்டப்பா என்றும் மல்யுத்த வீரர்களூடனும் ஒப்பிட்டு அவ்வப்போது கேலி செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த சூழலில் ரேசிடா கடந்த 24ஆம் தேதி முதல் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தென்னந்தோப்பு ஒன்றிற்குள் அந்தப் பெண்ணின் உடல் எரிந்து காணப்பட்டது. சற்று தூரத்தில் அந்தப் பெண்ணின் தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அப்பெண்ணின் நண்பரான அலி இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

fire - 2026

சம்பவத்தன்று ரோசிடாவின் பைக்கில் அலி சென்றுள்ளார். பொன்டோக் நோங்கோ கிராமத்துக்கு அருகில் உள்ள தென்னந்தோப்புக்குச் சென்றதும் ரோசிடாவை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்ட அலி, ரோசிடாவின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

பின்னர் மறைத்து எடுத்துச் சென்ற பெட்ரோலை ரோசிடாவின் சடலத்தின் மீது ஊறி தீ வைத்த அலி, ரோசிடாவின் செல்போன், டூவீலர் போன்றவற்றை எடுத்துச் சென்று விற்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அலியை போலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் குண்டாக இருப்பது குறித்து அடிக்கடி கிண்டல் செய்ததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ரோசிடாவைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால் அலிக்கு மரண தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.