ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

கல்வி கிரைம் நியூஸ் சற்றுமுன் பொது தகவல்கள்
murder - 2026

ஒருதலைக் காதலால், பள்ளி வகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கல்லூரி மாணவன் ஒருவன் கொலை செய்துள்ளான்.

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையான ரம்யா நேற்றுகாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

school 1 - 2026

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களும், பள்ளி நிர்வாகமும் குறிஞ்சிப்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

deadbody - 2026

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், ரம்யாவை கொலை செய்தவர் அவரை ஒருதலையாகக் காதலித்த கல்லூரி மாணவன் ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.