மலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி

உலகம்

கோலாலம்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா 21-13, 21-9 என்று நேர் செட்களில் அவரை வீழ்த்தினார். இவர் 2014-ம் ஆண்டு மலேசிய ஓபனில் சாய்னாவை வீழ்த்தி வெளியேற்றியவர். இந்த ஆட்டம் 30 நிமிடங்களே நீடித்தது. இதையடுத்து காலிறுதியில் மற்றொரு சீன வீராங்கனை சுன் யூ என்பவரை சாய்னா எதிர்கொள்கிறார் சாய்னா. ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வியைத் தழுவி வெளியேறினர். இரட்டையர் பிரிவில் ஜ்வாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இந்தோனேசிய இணை நித்யா கிருஷிந்தா மகேஸ்வரி-கிரேசியா பொலீ ஆகியோரிடம் 23-21, 8-21, 17-21 என்ற செட்களில் தோல்வி அடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.